ரஜினியின் மனப் போராட்டம் ....நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதுமே தொடர்ந்து ஒரு மனப் போராட்டம் இருந்து வருவதை கூர்ந்து கவனித்தால் தெரியும் .அதாவது ,அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதே அது ...இவர் நடித்த அண்ணாமலை ,பாஷா ,முத்து படங்களைத் தொடர்ந்து இவருக்கு ஒரு மக்கள் செல்வாக்கு இருந்தது என்னவோ உண்மைதான் ...ஆனால் மனிதர் அப்போது அதை சட்டை செய்யாமல் இருந்துவிட்டு ,இப்போது இழந்த செல்வாக்கை எப்படியாவது மீட்கத் துடிக்கிறார்... பாவம்... என்ன செய்வது? ...என்ன செய்தும், போனது போனது தான் ... சரி இப்போதாவது உறுதியான நிலைப்பாட்டை மனிதர் எடுத்தாரா? என்றால் அதுவும் இல்லை...ரஜினி சார் ...அரசியலுக்கு வருவது ஒன்றும் இமயமலைக்கு போவதை விட பாவச் செயல் அல்ல ...ஏனென்றால் இந்த அளவிற்கு உச்சம் தொட்டிருக்கும் தாங்கள் சமுகத்திற்கு ஒன்றுமே செய்யாமல் போனால் தான் பாவம் ...எனவே துணிந்து வாருங்கள் ....
Thursday, February 3, 2011
Monday, January 24, 2011
மனிதர்களின் வேறுபாடு
மனிதர்களின் வேறுபாடு ...கரடு முரடான உணர்ச்சிப் பிளம்புகளை எல்லா மனிதர்களுமே கொண்டிருக்கிறார்கள் ...ஆனால் அந்த உணர்சிகளை நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தவர்கள் சிறந்த மனிதர்கள் எனப்படுகிறார்கள் ...உணர்ச்சிகளை நேர்த்தியாக கையாள நிறைய அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது ...இந்த உத்திகளில் தேர்ந்தவர்கள் நமது நவீன சாமியார்கள் ...எனவேதான் மக்கள் அவர்களை நாடிப் போகிறார்கள்.. உணர்சிகளைக் கையாளத் தெரிந்த விகிதத்திலேயே மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள் ...இன்று உணர்சிகளைக் கையாள அறிவியல் ரீதியாக எமொசின்ல் இன்டளிஜன்ஸ் என்கிற கருத்தாக்கம் வந்துவிட்டது ...ஆகவே மக்கள் ஏமாறாமல் அறிவியல் விழிப்புனர்வோடு இருக்க முன்வர வேண்டும் ... இதில் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் விளக்குகிறேன் ....
அதிர்வுகள் .
அதிர்வுகள் .. .இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இடைவிடாத ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது ...அது இனிய அதிர்வுகள் மூலம் நம்மிடையே தொடர்பு கொள்கிறது ...சப்தங்கள் மூலமாக ,மலர்களின் மூலமாக ,வண்ணங்களின் மூலமாக இன்னும் எதன் மூலமாகவும் ...அதை அதனோடு இணைந்து சரியான அலை வரிசையில் அமைத்துக்கொண்டோமானால் ...ஒரு ரேடியோ அலை வரிசையைக் கேட்பது போன்றே கேட்டு மகிழலாம் ...இந்த நிலை எல்லையற்ற ஆனந்தம் கொண்டது ....
Saturday, January 22, 2011
Wednesday, January 19, 2011
வாழ்வின் தேடல் ...
வாழ்வின் தேடல் ...கஷ்ட்டப்பட்டுப் பணம் தேடுகிறோம் ...ஆனால் இஷ்ட்டப்பட்டு மனம் தேடுகிறோமா? ...அறிவின் விழிப்பு நிலைதான் உயிரின் உச்சக்கட்ட பரிணாமமாக கருதப்படுகிறது ...அப்படியிருக்க நம்மில் எத்தனை பேர் அறிவு தேடலுக்கு நேரம் ஒதுக்குகிறோம்?...சிந்தித்துப் பாருங்கள் ...வாழ்வின் தேடல் எல்லையற்ற ஆனந்தம் மிக்கது..
Monday, January 17, 2011
எது பொது நலம்?
எது பொது நலம்? ...எதுவுமே பொது நலம் அல்ல ...எல்லாமே சுய நலம்தான்..எப்படி? என்கிறீர்களா?...இந்த சுயநலம் இருக்கிறதே அதுக்குள்ளதான் சூட்சுமமே அடங்கி இருக்கிறது ...இந்த சுயத்தை சரியாக அமைத்துக்கொண்டுவிட்டோமானால்...பிறகு நல்ல சுயம் எது?கேட்ட சுயம் எது ? என்றுதான் கேள்வியே எழும்..அல்லவா? ...ஆக ,நாம் எல்லோரும் நமது சுயத்தின் மீதான நமது கவனத்தைத் திருப்பி நல்ல சுயத்தைக் கட்டமைத்துக்கொள்வோமாக !...எப்படி? என்கிறீர்களா என்னிடம் கேளுங்கள் சொல்கிறேன்....
Wednesday, January 12, 2011
Subscribe to:
Posts (Atom)