Sunday, February 6, 2011

இசைஞானிக்கு என்ன செய்யப் போகிறோம்? .

இசைஞானிக்கு என்ன செய்யப் போகிறோம்? ...இசைஞானி இளையராஜாவின் இசையில் உருகாத உள்ளம் கிடையாது ...எதிரியும் கூடப் புறக்கணிக்க முடியாத இசை ...எந்தப் படைப்பும் வீண் போகாத சொத்து ...அவர் வெடித்துக் கிளம்பிய விதை ...விரிந்து பரந்த இசைப் பிரபஞ்சம் ...இசையெனும் ஆழ்கடலில் மூழ்கி அதன் வியப்புக்களை வெளிக் கொணர்ந்த விஞ்ஞானி ...அத்தகைய மேதைக்கு அவர் வாழும் களத்தில் நாம் என்ன சிறப்பு செய்திருக்கிறோம்? ..ஒருவேளை  தாழ்ந்த சமுகத்தில் பிறந்ததால் அவர் சிறப்புக்கள் பறை சாற்றப் படவில்லையோ என்ற ஆதங்கம் வருகிறது ...இசைமேதை பீத்தோவனின் இசைக் குறிப்புக்களில் ஒரே ஒரு குறியீடை மாற்றினால் கூட ஒரிஜினல் பீலிங் கிடைக்காது என்பார்கள் ...அதாவது அந்த படைப்பில் அவர் முழுக்கக் கரைந்து படைப்பில் நிறைந்து விட்டார் என்பது அதன் பொருள் ..அவரது படைப்பை அவரைத் தவிர வேறு எவரும் மாற்றம் செய்து கூடுதல் சிறப்பு செய்துவிட முடியாது என்பது அதன் உட்கருத்து...இந்தக் கருத்து எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது ...ஆனால் நமது  ராஜாவின் இசையில் இந்த உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் ...பீதொவனுக்காவது மேலை நாட்டு சாஸ்திரிய சங்கீதம் என்ற ஒரேஒரு எல்லை மட்டுமே ....ஆனால்  நமது ராஜாவோ உள்ளூர் கொட்டு துவங்கி ....சிம்போனி வரை...அப்பப்பா ....அவர் தொடாத பரிமாணங்கள் கிடையாது என்றே சொல்லலாம் ...அந்த அளவிற்கு அவர் எல்லைகள் கடந்த இமயம் ...அவருக்கு  அவர் வாழும் காலத்தில் உரிய சிறப்பு செய்திருக்கிறோமா? என்றால் இல்லை ..என்றே சொல்லத் தோன்றுகிறது ....சரி ...என்ன செய்யலாம்?...முதலாவதாக அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட வேண்டும் ...அவரது படைப்புக்கள் அரசால் நாட்டுடமை ஆக்கப்படுவதுடன் ,அவரது இசைக் குறிப்புக்கள் இசைப் பல்கலையின் பாடமாக்கப் பட வேண்டும் ...செய்யுமா அரசு?...                                                                                              
                                                          இதை ஆமொதிப்பவர்கள் தயவு செய்து ஓட்டுப் போட்டு கருத்திற்கு வலு சேர்க்கவும் .....நன்றி ...தொடர்புக்கு :இரா .ஜெயகுமார் 9865896864                                   

7 comments:

  1. ஜெயகுமார், இளையராஜா என்கிற மாமேதைக்கு நிகர் அவரே, அவருக்கு இடு இணை இல்லை.

    நிற்க.... தங்களது கருத்து "ஒருவேளை தாழ்ந்த சமுகத்தில் பிறந்ததால் அவர் சிறப்புக்கள் பறை சாற்றப் படவில்லையோ என்ற ஆதங்கம் வருகிறது" வருத்தம் தருகிறது. அவரது படைப்புகள் சாதி, மதம், இனம் தாண்டி ஊடுறிவிட்டது, காலத்தால் அழியாதது. அவரது உழைப்பு, திறமை அளவிட முடியாதது. அனைவரது அங்கீகாரமும் அவருக்கு கிடைத்து விட்டது. தயை கூர்ந்து அவரை ஒரு விவாத பொருளாக ஆக்கி அவரது திறமை மற்றும் உழைப்பை புரம் தள்ள வேண்டாம். மக்கள் அங்கீகாரம் அந்த மாமேதைக்கு எப்போதோ கிடைத்துவிட்டது. அரசு அங்கீகாரம் வெறும் பதிவு மட்டும் தான் அது நிச்சயம் கிடைக்கும்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே ,தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி ...அரசின் விருதுகள் பற்றி எனக்குக் கவலை இல்லை ...இசைமேதையின் படைப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்பதே என் கவலை ....

    ReplyDelete
  3. ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லே!

    ReplyDelete
  4. //jayakumar said...

    yes madam ottu potingala?//

    எங்க ஓட்டு போடுறது..ஜெயா..நீங்க உங்க ப்லாக் கில் முதலில் திரட்டிகளின் ஓட்டு பட்டைகளை வையுங்கள்..தமிளிஷ் மற்றும் தமிழ் மணம் இப்படி இடுகைகள் திரட்டிகள் நிறைய இருக்கு...நீங்க அதில் உறுப்பினர் ஆகிவிட்டு..அந்த ஓட்டு பட்டைகளை இணையுங்க...இன்னும் நிறைய இசை ஞானி பற்றி எழுதுங்க....எங்களுக்கு தெரியாத விஷயங்கள் எவளவோ இருக்கு..as a musician உங்களிடம் நிறைய எதிர்பார்கிறோம்...அடுத்த பதிவை எதிர்நோக்கும்..

    உங்கள் ஊரு தோழி ஆனந்தி..:)

    ReplyDelete
  5. yes dear ananthi...the problem is i don't know much about the blog...now only i am practicing...in this regard, i need a lot of help from the experts...if i got it i will write more...

    ReplyDelete
  6. ஜெயக்குமார் சார்,இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்.வேறு யாரும் இல்லை.அவர் எப்பொழுதுமே மக்களின் மனதில் நிற்கிறார்.விருது என்ற கண் துடைப்பு அவருக்கு தேவை இல்லை.

    ReplyDelete