Tuesday, March 15, 2011

தேர்தல் டெண்டர் ...

தேர்தல் டெண்டர் ...ஆஹா கொண்டாட்டம் தேர்தல் டெண்டர் விட்டாச்சு ..ஐந்து வருடங்களுக்கு தமிழகத்தை ஆண்டு  அனுபவிக்கும் உரிமை ...விறுவிறுப்பாக ஒப்பந்தப் புள்ளி அறிவிப்புக்களும் ,அதற்கான வேலைகளும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன ...அதிக விலை கொடுத்து ஏலம் எடுப்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை ஆண்டு அனுபவித்துக் கொள்ள  ஏக போக  உரிமை அளிக்கப்படும் ... பிழைப்பைக் கெடுத்து ,வெயில் ,மழையில்  நின்று அடி, உதை பெற்றுக் கொண்டாவது ஓட்டுப் போடும் பாக்கியத்தைப் பெற அடிமைகளும் தயாராகி விட்டார்கள் ....இனி என்ன ?...சே ...
                                    மலம்  தோய்த்த  துணி எடுத்து முகம் துடைத்துக் கொள்வதா? 

Monday, February 21, 2011

அநாதை நாய்கள் ....

அநாதை  நாய்கள் ....ஒரு நாள் எதிர் வீட்டுப் பள்ளி பாலகர்கள் பள்ளிக்கூடமருகில் குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்து குட்டி நாய் ஒன்றைக் கொண்டு வந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் ...நாய்க் குட்டி ரொம்ப அழகாக இருக்கவே நாங்கள் அதை வாங்கி வளர்க்க ஆரம்பித்தோம் .கொஞ்ச நாளில் அது எங்கள் வீட்டில் ஒரு அங்கதினராகவே மாறிப் போனது ...ம்ஹும் ...நாங்களே மாறிப் போனோம் .முகமற்ற மனிதர்கள் ...உணர்வற்ற உறவுகள் ...வியாபார நோக்கம் கொண்ட சமுதாயம் ...இப்படிப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிருந்த எங்களுக்கு குட்டி நாய் ஆறுதலாக இருந்தது .பால்புட்டி ,தொட்டில் சகிதமாக பிரவுனி என்ற அந்த குட்டி எங்கள் வீட்டில் ரொம்ப செல்லமாக வளர்ந்து வந்தாள்...ஒருநாள் ...ஒருநாள்..ம்ஹும் சொல்லவே  மனம் பதை பதைக்கிறது ...திடீரென ...அந்த கொடூர நாளில் ,அந்த ஒரே நாளில் எங்கள் ப்ரவுனிக்கு என்ன நேர்ந்ததோ ...ரத்தமாய்க் கழிந்து ,ஒடுங்கிப் போய் எங்களையே பரிதாபமாகப் பார்த்தாள் ...எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியாமல்  அருகில் இருந்து ஒரு வைத்தியரை அழைத்தோம் ...அவர்  வந்து பார்த்து விட்டு ,ஊசியும் போட்டு விட்டு  சரியாகாவிட்டால்  மதுரையிலுள்ள  தன் நண்பனிடம் காட்டுமாறு  கூறி ,நண்பரின் முகவரியைக் கொடுத்துவிட்டு சென்றார் .அடுத்த நாள் ப்ரவுனிக்கு நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது .அவசர அவசரமாக ஒரு ஆட்டோவைப் பிடித்து மதுரைக்கு கொண்டு சென்றோம் ...வழியில் பிரவுனி வலியால்   துடித்தது ...எபோதும் துருதுருவென இருக்கும் பிரவுனி சப்தம் கூடப் போடமுடியாமல் எங்களையே   பரிதாபமாகப் பார்த்தது...எங்களுக்கு அது செய்த சேட்டைகள் எல்லாம் நினைவுக்கு வந்தது ...பிரவுனி ஒரு நாள் சாப்பிடக் கொடுத்த பூரியை பாதி தின்று விட்டு மீதியை காக்கா  தின்றுவிடும் என்று அறிவாக மன்னுக்கடியில் புதைத்து வைத்ததை  கூறி என் மகன் அழுதான் ...பிரவுனி எனக்கு வேணும்பா ...என்று என் மகள் அழுதாள்    ...எங்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஒரே பதற்றம் ...டாக்டர் வீடு வந்து விட்டது ...அவசர அவசரமாக பிரவுனியை தூக்கிக் கொண்டு ஓடினோம் ...டாக்டர் பார்த்துவிட்டு சில மருந்துகளும்,ஊசியும் செலுத்தினார் ...பாவம்  ப்ரவுனிக்கு  கத்தக்  கூட முடியவில்லை ...சிறிது நேரம்  கழிந்தது ..."சரியாகிவிடுமா டாக்டர் ... "  -இது  என் மனைவி ...அவள் தான் ப்ரவுநியைப்  பார்த்துப் பார்த்துப் பிள்ளையைப்போல் வளர்த்தவள் ..."பர்வோஸ்  எனும் உயிர் கொல்லி நோய் தாக்கி இருக்கிறது ...சற்றுப் பொறுத்திருந்து பாப்போம் .." இது டாக்டர் .அதற்குள்  ப்ரவுனிக்கு  ரத்தமாய்க் கழிய ஆரம்பித்து விட்டது ....கடுமையான நாற்றம் வேறு ..."என்ன செய்வது டாக்டர் ?"-நாங்கள் ...."பிழைக்காது ...எங்காவது  விட்டு விடுங்கள் ..." டாக்டர் .எங்கள் செல்ல பிரவுனியை தூக்கி கொண்டு வந்து ,அருகில் உள்ள ஒரு தெருவில் விட்டோம்..அது ஓடிப் போய் ஒரு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்து வழிந்த சாக்கடை நீரை நக்கிக் கொண்டு எங்களையே பார்த்தது ...அதனை சுற்றியும் பல அநாதை நாய்கள் ..".உறவுகள்  தொடர் கதை ..."-எங்கோ தூரத்தில் இளையராஜாவின்  பாட்டு .  என் மனைவியைப் பார்த்தேன் ...உறவுகளைத் தொலைத்த வாழ்க்கையில் ...இடையில் வந்த புது உறவும்  பறிபோன வேதனையில்  மவுனமாய் அவள் கண்களில் இருந்து  தாரை தாரையாய் கண்ணீர்  வழிய ,நான் அவளையே புதிதாய் உணர்ந்தேன் ..."உன் கண்களின் ஓரம் ..எதற்காகவோ ஈரம் ..."  அதே பாடல் தொடர்ந்தது ....மனிதர்கள் ஏன் பிராணிகள் வளர்க்கிறார்கள்? ...நான் சிந்தித்தேன் மனம் வலித்தது...                                  மனிதர்களும் கூட இப்படித்தான் ஆயிரம் உறவுகள் இருந்தும் ...பல நேரங்களில்   அனாதைகளாய்...மனிதம் செத்துக் கொண்டிருப்பதை எண்ணி மௌனமாய் அழுதேன் ....

Sunday, February 6, 2011

இசைஞானிக்கு என்ன செய்யப் போகிறோம்? .

இசைஞானிக்கு என்ன செய்யப் போகிறோம்? ...இசைஞானி இளையராஜாவின் இசையில் உருகாத உள்ளம் கிடையாது ...எதிரியும் கூடப் புறக்கணிக்க முடியாத இசை ...எந்தப் படைப்பும் வீண் போகாத சொத்து ...அவர் வெடித்துக் கிளம்பிய விதை ...விரிந்து பரந்த இசைப் பிரபஞ்சம் ...இசையெனும் ஆழ்கடலில் மூழ்கி அதன் வியப்புக்களை வெளிக் கொணர்ந்த விஞ்ஞானி ...அத்தகைய மேதைக்கு அவர் வாழும் களத்தில் நாம் என்ன சிறப்பு செய்திருக்கிறோம்? ..ஒருவேளை  தாழ்ந்த சமுகத்தில் பிறந்ததால் அவர் சிறப்புக்கள் பறை சாற்றப் படவில்லையோ என்ற ஆதங்கம் வருகிறது ...இசைமேதை பீத்தோவனின் இசைக் குறிப்புக்களில் ஒரே ஒரு குறியீடை மாற்றினால் கூட ஒரிஜினல் பீலிங் கிடைக்காது என்பார்கள் ...அதாவது அந்த படைப்பில் அவர் முழுக்கக் கரைந்து படைப்பில் நிறைந்து விட்டார் என்பது அதன் பொருள் ..அவரது படைப்பை அவரைத் தவிர வேறு எவரும் மாற்றம் செய்து கூடுதல் சிறப்பு செய்துவிட முடியாது என்பது அதன் உட்கருத்து...இந்தக் கருத்து எந்த அளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது ...ஆனால் நமது  ராஜாவின் இசையில் இந்த உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன் ...பீதொவனுக்காவது மேலை நாட்டு சாஸ்திரிய சங்கீதம் என்ற ஒரேஒரு எல்லை மட்டுமே ....ஆனால்  நமது ராஜாவோ உள்ளூர் கொட்டு துவங்கி ....சிம்போனி வரை...அப்பப்பா ....அவர் தொடாத பரிமாணங்கள் கிடையாது என்றே சொல்லலாம் ...அந்த அளவிற்கு அவர் எல்லைகள் கடந்த இமயம் ...அவருக்கு  அவர் வாழும் காலத்தில் உரிய சிறப்பு செய்திருக்கிறோமா? என்றால் இல்லை ..என்றே சொல்லத் தோன்றுகிறது ....சரி ...என்ன செய்யலாம்?...முதலாவதாக அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் துவங்கப்பட வேண்டும் ...அவரது படைப்புக்கள் அரசால் நாட்டுடமை ஆக்கப்படுவதுடன் ,அவரது இசைக் குறிப்புக்கள் இசைப் பல்கலையின் பாடமாக்கப் பட வேண்டும் ...செய்யுமா அரசு?...                                                                                              
                                                          இதை ஆமொதிப்பவர்கள் தயவு செய்து ஓட்டுப் போட்டு கருத்திற்கு வலு சேர்க்கவும் .....நன்றி ...தொடர்புக்கு :இரா .ஜெயகுமார் 9865896864                                   

Thursday, February 3, 2011

ரஜினியின் மனப் போராட்டம் ....

ரஜினியின் மனப் போராட்டம் ....நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதுமே தொடர்ந்து ஒரு மனப் போராட்டம் இருந்து வருவதை கூர்ந்து கவனித்தால் தெரியும் .அதாவது ,அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பதே அது ...இவர் நடித்த அண்ணாமலை ,பாஷா ,முத்து படங்களைத் தொடர்ந்து இவருக்கு ஒரு மக்கள் செல்வாக்கு இருந்தது என்னவோ உண்மைதான் ...ஆனால் மனிதர் அப்போது அதை சட்டை செய்யாமல் இருந்துவிட்டு ,இப்போது இழந்த செல்வாக்கை எப்படியாவது மீட்கத் துடிக்கிறார்... பாவம்... என்ன செய்வது? ...என்ன செய்தும், போனது போனது தான் ... சரி இப்போதாவது உறுதியான நிலைப்பாட்டை மனிதர் எடுத்தாரா? என்றால் அதுவும் இல்லை...ரஜினி சார் ...அரசியலுக்கு வருவது ஒன்றும் இமயமலைக்கு போவதை விட பாவச் செயல் அல்ல ...ஏனென்றால் இந்த அளவிற்கு உச்சம் தொட்டிருக்கும் தாங்கள் சமுகத்திற்கு ஒன்றுமே செய்யாமல் போனால் தான் பாவம் ...எனவே துணிந்து வாருங்கள் ....

Monday, January 24, 2011

மனிதர்களின் வேறுபாடு

மனிதர்களின் வேறுபாடு ...கரடு முரடான உணர்ச்சிப் பிளம்புகளை எல்லா மனிதர்களுமே கொண்டிருக்கிறார்கள் ...ஆனால் அந்த உணர்சிகளை நேர்த்தியாகக்  கையாளத் தெரிந்தவர்கள் சிறந்த மனிதர்கள் எனப்படுகிறார்கள் ...உணர்ச்சிகளை  நேர்த்தியாக கையாள  நிறைய அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது ...இந்த உத்திகளில் தேர்ந்தவர்கள் நமது நவீன சாமியார்கள் ...எனவேதான் மக்கள் அவர்களை நாடிப் போகிறார்கள்.. உணர்சிகளைக் கையாளத் தெரிந்த விகிதத்திலேயே மனிதருக்கு மனிதர்  வேறுபடுகிறார்கள் ...இன்று உணர்சிகளைக் கையாள அறிவியல் ரீதியாக எமொசின்ல்  இன்டளிஜன்ஸ்   என்கிற கருத்தாக்கம் வந்துவிட்டது ...ஆகவே  மக்கள் ஏமாறாமல் அறிவியல் விழிப்புனர்வோடு  இருக்க முன்வர வேண்டும் ...  இதில் சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் விளக்குகிறேன் ....     

அதிர்வுகள் .

அதிர்வுகள் .. .இந்த பிரபஞ்சத்திற்கும் நமக்கும் இடையே இடைவிடாத ஒரு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது ...அது இனிய அதிர்வுகள் மூலம் நம்மிடையே தொடர்பு கொள்கிறது ...சப்தங்கள் மூலமாக ,மலர்களின் மூலமாக ,வண்ணங்களின் மூலமாக இன்னும்  எதன் மூலமாகவும் ...அதை அதனோடு இணைந்து சரியான அலை வரிசையில் அமைத்துக்கொண்டோமானால் ...ஒரு ரேடியோ அலை வரிசையைக் கேட்பது போன்றே கேட்டு மகிழலாம் ...இந்த நிலை எல்லையற்ற ஆனந்தம் கொண்டது ....

Saturday, January 22, 2011

எனது வலைப்பூ

என் கருத்துக்களை இந்தப் வலைப்பூவில் பதிவிடுகிறேன்